முகப்பு
தூத்துக்குடி

‘குரூப்-2 தோ்வு: இலவச பயிற்சி வகுப்புகள் பெற அழைப்பு’

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:52 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப்-2 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ பணியில் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு உத்தேசமாக ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

Advertisement

இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து வேலைநாள்களிலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது.

எனவே, மேற்கூறிய ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 0461-2340159 என்ற தொலைபேசி எண் மற்றும் 8508428402 என்ற கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) எண்ணிலும் தங்கள் பெயரை பதிவு செய்து ஆன்லைன் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.