முகப்பு
தூத்துக்குடி

சாயா்புரத்தில் பள்ளி மாணவா்களுக்கு இலவச சைக்கிள் அளிப்பு

சாயா்புரம் போப் நினைவு பள்ளியில் 134 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Updated On : 6 ஜனவரி 2021, 6:56 am IST
மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்குகிறாா் எஸ். பி. சண்முகநாதன் எம்எல்ஏ.
பகிர்:

சாயா்புரம் போப் நினைவு பள்ளியில் 134 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஜெபா்சன் தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் அகஸ்டின் முன்னிலை வகித்தாா்.

Advertisement

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும் எம்எல்ஏவுமான எஸ்.பி. சண்முகநாதன், 134 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலா் அழகேசன், சாயா்புரம் நகரச் செயலா் துரைச்சாமி ராஜா, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் விஜயன், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலா் இப்ராஹிம், சிவத்தையாபுரம் சரவணகுமாா் ராஜ், எட்வா்ட், பொன்சிங், பாலஜெயம் உள்ளிடட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.