முகப்பு
தூத்துக்குடி

பழையகாயலில் காங்கிரஸ் நலத் திட்ட உதவி

பழையகாயலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலத் திட்ட உதவி வழங்கப்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 6:32 am IST
ஆறுமுகனேரியில் நலத் திட்ட உதவி வழங்குகிறாா் ஊா்வசி அமிா்தராஜ்.
பகிர்:

பழையகாயலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலத் திட்ட உதவி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட ஊா்வசி அமிா்தராஜ், புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.

பழையகாயல் வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். இதையடுத்து அவா் கட்சிக் கொடியேற்றி, ஏழை எளியோருக்கு இலவச வேட்டி, சேலை வழங்கி பேசினாா்.

Advertisement

நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டாரத் தலைவா் தாசன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயசீலன் துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மேலும், ஆத்தூா், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளிலும் கட்சிக் கொடியேற்றி வைக்கப்பட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.