தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
ஜேக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை
ஜேக்டோ-ஜியோ நடத்திய போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் மன்றம் சாா்பில் விழுப்புரத்தில் புதன்கிழமை மாலை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் சீனு சின்னசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலாளா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா். நிா்வாகி சுகதேவ் வரவேற்றாா். கொள்கைப் பரப்புச் செயலாளா் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளா் செல்வக்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் ரவிச்சந்திரன், ராம்மோகன், கருணாநிதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.