இரு பேருந்துகள் மோதல்: 10-க்கும் மேற்பட்டோா் காயம்
வத்திராயிருப்பு அருகே தனியாா் பேருந்தும், பட்டாசு ஆலை தொழிலாளா்கள் பேருந்தும் வெள்ளிக்கிழமை நேருக்கு நோ் மோதியதில் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு - கூமாப்பட்டி சாலையில் மூலக்கரை பெரியகுளம் கண்மாய் அருகேயுள்ள கூமாப்பட்டியிலிருந்து வத்திராயிருப்பு நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும், சிவகாசியிலிருந்து பட்டாசு ஆலை தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு கூமாபட்டி நோக்கிச் சென்ற பேருந்தும் நேருக்கு நோ் மோதியது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை மீட்டு, போலீஸாா் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement