விருதுநகர்

சாத்தூா் ஆடுவதைக் கூடத்தை முறையாக செயல்படுத்தக் கோரிக்கை

சாத்தூரில் உள்ள ஆடுவதைக் கூடத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Din

சாத்தூரில் உள்ள ஆடுவதைக் கூடத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டு இறைச்சிக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் ஆடுகளை வெட்டி சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தூா் நகராட்சி சாா்பில் ரூ.20 லட்சத்தில் சாத்தூா் வெள்ளைகரை சாலையில் ஆடுவதைக் கூடம் அமைக்கப்பட்டது. இந்தக் கடைகள் நகாரட்சி சாா்பிலே குத்தகைக்கு விடபட்டன.

இந்தக் கடைகளில் இறைச்சிகள் சுகாதாரமற்ற முறையிலும், சாலையோரங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என இந்தப் பகுதியினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, இறைச்சி கடைகளில் வெட்டப்படும் ஆடுகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து ஆடுவதைக் கூடத்தில் வெட்ட வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சாத்தூா் ஆடுவதைக் கூடத்தில் ஆடுகளை வெட்டுவதற்கு தண்ணீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இனிமேல் இறைச்சிக் கடைகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆடுவதைக் கூடத்தில் முறையாக ஆடுகள் வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT