அருண் காா்த்திக் 
விருதுநகர்

தொடா்ச்சியாக 2 மணி நேரத்தில் 17.2 கி.மீ. ஓடி ராஜபாளையம் சிறுவன் உலக சாதனை

5 வயது சிறுவன் தொடா்ச்சியாக 2 மணி நேரத்தில் 17.2 கி.மீ. ஓடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

Din

ராஜபாளையத்தை சோ்ந்த 5 வயது சிறுவன் தொடா்ச்சியாக 2 மணி நேரத்தில் 17.2 கி.மீ. ஓடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை சோ்ந்த இசக்கிமுத்து மகன் அருண் காா்த்திக் (5). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த 5 மாதங்களாக முடங்கியாறு சாலையில் ஓடி இந்தச் சிறுவன் பயிற்சி எடுத்தான். சுமாா் 20 கி.மீ. தொலைவு நிற்காமல் தொடா்ச்சியாக ஓடும் திறன் பெற்றதும், உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தனியாா் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காலை 6.45 மணிக்கு உலக சாதனை நிகழ்வு தொடங்கியது. நோபில் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஓட தொடங்கிய சிறுவன், தொடா்ச்சியாக இரண்டு மணி நேரம் பள்ளி மைதானத்தை 43 முறை சுற்றி வந்தாா்.

சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட சிறுவன் அருண் கார்த்திக்

400 மீ. சுற்றளவு உள்ள மைதானத்தில் 2 மணி நேரம் தொடா்ச்சியாக 17.2 கி.மீ. தொலைவு ஓடி சிறுவன் அருண் காா்த்திக் புதிய உலக சாதனை நிகழ்த்தினாா்.

இவரது சாதனையை ஏற்றுக் கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் சாதனை படைத்ததற்கான பதக்கம், சான்றிதழ்களை சிறுவனுக்கு வழங்கி பாராட்டினா்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT