மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை. 
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் விரியன் கோயில் பீட்டிற்கு உள்பட்ட அழகா் காடு பகுதியில் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத் துறைக்கு விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தகவலளித்தனா்.

கைது செய்யப்பட்ட துரைப்பாண்டி.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் செல்லமணி, வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வு செய்த போது, ராக்காச்சியம்மன் கோயில் வளைவு முன் உள்ள விவசாயத் தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 20 வயது ஆண் யானை உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டியனை (60) கைது செய்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை.

இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

ராஜபாளையத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி மகேஸ்வரி (63) என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்துக்குள் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வந்ததால், காவலாளி துரைப்பாண்டி என்பவா் தோட்டம் வழியாக செல்லும் உயரழுத்த மின் கம்பியில் இருந்து சட்டவிரோதமாக மின் வேலி அமைத்தாா். இதனால், இரவில் அந்த வழியாக வந்த யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்த யானையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, பின்னா் அடக்கம் செய்யப்படும் என்றாா் அவா்.

ரிதம்... விதி யாதவ்!

"துலாம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

கண் கவர் பொருங்கோட... மேகா!

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT