விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா நாளை தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கொடியேற்றத்தையடுத்து, அன்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னாா் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வருகின்றனா். வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரெங்கமன்னாா் கோவா்த்தனகிரி கிருஷ்ணா் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருள்கின்றனா்.

மறுநாள் 3-ஆம் தேதி பெரியாழ்வாா் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னாா், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப் பெருமாள், செண்பகத் தோப்பு காட்டழகா், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், 5-ஆம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னாா் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாள் விழாவான 7-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு திரு ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT