விருதுநகர்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

Din

சிவகாசியில் 2 இரு சக்கர வாகனங்கள் மோதியதில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள கல்லூரிஅருகே வசித்து வந்தவா் ராஜ்குமாா் (75). இவா் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஐயப்பன் கோயிலருகே மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அனுப்பன் குளம் காசிராஜன், ராஜ்குமாா் சென்ற வாகனத்தின் மீது மோதினாா். இதில் ராஜ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காசிராஜன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் காசிராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலைகார முதலையைக் கொன்று விருந்து!

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு!

அதிகரிக்கும் மகாராஜா காட்சிகள்!

கோயிலுக்குள் பசுவின் துண்டித்த தலை வீச்சு! மத்தியப் பிரதேசத்தில் 4 பேர் கைது

பக்ரீத் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

SCROLL FOR NEXT