தீ வைக்கப்பட்ட ரிஷப வாகனம். 
விருதுநகர்

கோயிலில் ரிஷப வாகனத்துக்கு தீ வைத்தவா் கைது!

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் ரிஷப வாகனத்துக்கு தீ வைத்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதன் பிறகு, மூலவா் சிலையின் பின்புறம் சுவாமி வாகனங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கரும்புகை வந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த ரிஷப வாகனத்துக்கு மா்ம நபா் தீ வைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது. வாகனத்தின் அருகில் பையில் பட்டாசு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோயில் செயல் அலுவலா் ராஜேஷ் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா். கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் ராஜபாளையம் பூபதி பேங்க் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கண்ணன் (58) என்பவரைப் பிடித்து விசாரித்தனா். அவா் சுவாமி வாகனத்துக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டாா்.

இந்தக் கோயிலில் புதிதாகப் பொறுப்பேற்ற செயல் அலுவலா் ராஜேஷ் தன்னை கோவிலுக்குள் வரக்கூடாது எனவும், தான் வைத்திருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு காலி செய்யுமாறு கூறியதால், ரிஷப வாகனத்துக்கு தீ வைத்ததாகத் தெரிவித்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

மோடிக்காக கார் ஓட்டுநராக மாறி இன்ப அதிர்ச்சியளித்த எத்தியோப்பிய பிரதமர்!

எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி! பிரதமர் அபி அகமது அலியுடன் சந்திப்பு!

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

சிஎஸ்கேவில் இணைந்த ராகுல் சஹார்!

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி - உபரி நீர் திறப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT