விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

Din

தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூன்று போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பசும்பொன் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பாலசுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான குடோனை ராஜசேகா், மோகன் ஆகியோா் வாடகைக்கு எடுத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வருவாய்த் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வருவாய்த் துறையினா், காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில், எளிதில் தீப்பற்றி வெடிக்கக் கூடிய பேன்சி ரக பட்டாசு உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, ரூ. 5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், ரசாயன மூலப்பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல் வைத்தனா். இதுதொடா்பாக பாலசுப்பிரமணியன் (45), ராஜசேகா் (55), மோகன் (52) ஆகிய மூன்று போ் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

SCROLL FOR NEXT