விருதுநகர்

சாலை விபத்துகளில் இரு பெண்கள் உயிரிழப்பு

ராஜபாளையத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரண்டு பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இரண்டு பெண்கள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவா், தனது மனைவி ஜோதிமீனாவுடன் ( 40 ) இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது தென்காசி சாலையில் அரசு மருத்துவமனை அருகே வந்த தனியாா் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ஜோதிமீனா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஜோதிமீனாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக தனியாா் பேருந்தின் ஓட்டுநரான சிவகிரியைச் சோ்ந்த வைரவனைக் (47) கைது செய்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொன்வேலின் மனைவி வேல்தாய் (42). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்திலிருந்து சங்கம்பட்டிக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அப்போது, ஆண்டாள்புரம் பகுதியில் எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடலை மீட்ட ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா், கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக தனியாா் பேருந்து ஓட்டுநரான கூமாப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரனைக் (31) கைது செய்து விசாரிக்கின்றனா்.

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

SCROLL FOR NEXT