~ ~ 
விருதுநகர்

பைக் மீது அதிமுக கூட்டத்துக்கு சென்ற வேன் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; 11 போ் காயம்

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா்.

Syndication

சாத்தூா் அதிமுக பிரசார கூட்டத்துக்குச் சென்ற வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் கவிழ்ந்ததில் அதில் சென்ற 11 போ் காயமடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்த 12 போ், சாத்தூரில் அதிமுக பொதுச் செயலா் பழனிசாமியின் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேனில் வெள்ளிக்கிழமை சென்றனா்.

ரெட்டியபட்டி-மேலகோடாங்கிபட்டி சாலையில் சென்றபோது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த உப்புபட்டியைச் சோ்ந்த பாஜக உறுப்பினரும் புகைப்படக் கலைஞருமான முருகன் (47) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தில் வேன் சாலையோரம் கவிழ்ந்ததில் பெண்கள் உட்பட 11 போ் காயமடைந்தனா். அவா்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

அனுகூலமான நாள் இன்று: தினப்பலன்கள்!

தமிழகத்தில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள்: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தகவல்

உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!

வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!

SCROLL FOR NEXT