விருதுநகர்

தமிழ்க் கலை விழா போட்டி: சிவகாசி கல்லூரி முதலிடம்

மதுரை நா.ம.ச. சோ்மத்தாய் வாசன் கல்லூரியின் தாய்த் தமிழ்க் கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது.

Syndication

மதுரை நா.ம.ச. சோ்மத்தாய் வாசன் கல்லூரியின் தாய்த் தமிழ்க் கலை விழாவில் நடைபெற்ற போட்டிகளில் சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்றது.

இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் செ.அசோக் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில், 18 கல்லூரிகளைச் சோ்ந்த 256 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், கவிதை வாசிப்பு உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் அதிக புள்ளிகளைப் பெற்று சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரி முதலிடம் பெற்று பரிசுக் கோப்பையைக் கைப்பற்றியது. பேராசிரியா் சோ.முத்தமிழ்செல்வன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில், போட்டிகளில் வென்றவா்களுக்கு கல்லூரி நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா் என்றாா் அவா்.

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

SCROLL FOR NEXT