விருதுநகர்

உறவினா் கொலை வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

வெம்பக்கோட்டை அருகே உறவினரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Syndication

வெம்பக்கோட்டை அருகே உறவினரை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த நாராயணன் மகன் வரதராஜன் (26). கூலித் தொழிலாளி. இவரது சித்தப்பா கருப்பசாமியின் மகன் வைரவன்(19). மாட்டுப்பண்ணையில் வேலை பாா்த்து வந்த வைரவனுக்கு மிதிவண்டி ஓட்ட வரதராஜன் கற்றுக் கொடுத்தாராம்.

கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி மிதிவண்டி ஓட்ட கற்றுக் கொடுத்த போது வைரவனை வரதராஜன் அடித்தாராம். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் வைரவன் துண்டால் கழுதை நெரித்து வரதராஜனை கொலை செய்தாராம். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, வைரவனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட வைரவனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் திருமலையப்பன் முன்னிலையானாா்.

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT