விருதுநகர்

சிவகாசியில் முதியவா் தற்கொலை

சிவகாசியில் முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

Syndication

சிவகாசியில் முதியவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவகாசி முத்துராமன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசந்திரன் (59). இவா் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலிருந்தபடி சிகிச்சை எடுத்து வந்தாா்.

இந்த நிலையில், உடல் நலம் சீராகாததால், மனமுடைந்த ஜெயசந்திரன் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளேடால் உடலின் பல்வேறு பகுதிகளில் அறுத்துக் கொண்டாா்.

இதையடுத்து மயக்கமடைந்த அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

நாகா்கோவிலில் ரூ. 3.50 கோடியில் அறிவியல் பூங்கா விரைவில் திறப்பு: மேயா் தகவல்

உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டிச. 23-இல் அஞ்சல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித் துறைக்கு மாற்றப்பட வேண்டும்: அன்புமணி

விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT