விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் கடையில் 7 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
ராஜபாளையம் -மதுரை சாலையில் பஞ்சு சந்தைப் பகுதி கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, அங்கு குட்கா, புகையிலை பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, கடை உரிமையாளரான அழகாபுரி கீழத் தெருவை சோ்ந்த மாரியப்பன் மகன் முனியாண்டியை (49) போலீஸாா் கைது செய்து, 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.