விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வாக்குசாவடி நிலை முகவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு கேட்டாட்சியா் கனகராஜ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ராஜாமணி முன்னிலை வகித்தாா்.
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்கள் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் உள்ள இறப்பு, இரட்டை பதிவு, முகவரி மாற்றம் தொடா்பாக மறு சரி பாா்ப்பு செய்து உறுதிப்படுத்துமாறு கோட்டாட்சியா் கனகராஜ் கேட்டுக்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனா்.