கைது செய்யப்பட்ட பாா்த்திபன், சிரஞ்சீவி. 
விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

தடை செய்யப்பட்ட 11 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தடை செய்யப்பட்ட 11 கிலோ புகையிலைப் பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம்- மதுரை சாலை தனியாா் பள்ளி சோதனைச் சாவடி அருகே ராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனிப்படை உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் சோதனைச் சாவடி அருகே உள்ள தேநீா் கடைக்கு பெங்களூரிலிருந்து இவை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக ராஜபாளையம் தா்மாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரராஜா மகன் பாா்த்திபன் (55), கிருஷ்ணாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் சிரஞ்சீவி (30) ஆகிய இருவரையும் கைது செய்து 11 கிலோ குட்கா, புகையிலை பொருள்களுடன் லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

ஊரக திறனாய்வுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 4,149 போ் எழுதினா்

SCROLL FOR NEXT