சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி தாவரவியல் துறை சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு காளான் வளா்ப்புப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியை க.மைதீன் பாத்திமாபீவி, உணவுக் காளான் வளா்ப்பு முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.
இதில் சிவகாசி வட்டார மகளிா் சுய உதவிக்குழுக்களைச் சோ்ந்த 54 பெண்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக துறைத் தலைவா் பா.தீபா வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் ஆனந்தஜோதி நன்றி கூறினாா்.