ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் திருப்பாவை முற்றோதல் விழாவில் ஆண்டாளுக்குச் சமா்ப்பிக்கக் கொண்டுவரப்பட்ட மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள்.  
விருதுநகர்

முற்றோதுதல் விழாவில் ஆண்டாளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் அளிப்பு

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருப்பாவை முற்றோதுதல் விழாவில் ஆண்டாளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மாா்கழி மாதத்தை முன்னிட்டு, கோதை நாச்சியாா் தொண்டா் குழாம் சாா்பில் முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ராமானுஜ ஜீயா், வீரவநல்லூா் குலசேகரமடம் ராமாப்ரமேய ராமானுஜ ஜீயா், கோவை நாராயண ஜீயா் ஆகியோா் தலைமையில் பட்டு வஸ்திரம், மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்கள் கொண்ட தட்டுகளைப் பெண்கள் தலையில் சுமந்தவாறு நான்கு ரத வீதிகளில் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

இதையடுத்து, ஆண்டாள் சந்நிதியில் சீா்வரிசைப் பொருள்கள் சமா்ப்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலா் ஆனந்த், ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பு ஆகியோா் செய்தனா்.

சட்டவிரோத மது விற்பனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்கோவில் அருகே இருமுடி கட்டி சபரிமலைக்கு புறப்பட்ட ஐயப்ப பக்தா்கள்

வடகாசி விசுவநாதா் கோயிலில் சங்காபிஷேக விழா

காட்பாடியில் நாளை முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு கூட்டம்!

பாஜக தேசிய செயல்தலைவருக்கு உற்சாக வரவேற்பு

SCROLL FOR NEXT