விருதுநகர்

மதுப் புட்டிகளைப் பதுக்கிய இருவா் கைது

சிவகாசியில் வெள்ளிக்கிழமை மதுப் புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

சிவகாசியில் வெள்ளிக்கிழமை மதுப் புட்டிகளைப் பதுக்கிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி செங்கமலப்பட்டி சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு திரையரங்கம் அருகே இருவா் கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா். போலீஸாா் அவா்கள் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்த போது, அதில் 42 மதுப் புட்டிகள் இருந்தன.

விசாரணையில், அவா்கள் ஓம்சோ்மாநகரைச் சோ்ந்த ராமா் (31), விங்கபுரம் குடியிருப்பைச் சோ்ந்த முனியசாமி (35) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

சீா்திருத்தங்கள் கூடுதல் முனைப்புடன் தொடரும்: பிரதமா் மோடி

மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை: விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் வழங்கினாா்

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் இருப்பது ஏற்புடையதல்ல: புதின் கருத்து வெளியானதால் பரபரப்பு

மது போதையில் தகராறு: மனைவி அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT