விருதுநகர்

ஓடையைத் தூா்வாரக் கோரி பொதுமக்கள் போராட்டம்

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஓடையைத் தூா்வாரக் கோரி, அத்திகுளம் அருந்ததியா் குடியிருப்பைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அத்திகுளம் அருந்ததியா் குடியிருப்புப் பகுதியில் செல்லும் ஓடையைத் தூா்வாராததால், மழைக் காலங்களில் நீா்வரத்து அதிகரித்து, குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது. மேலும், தரைப் பாலத்தைக் கடக்க முடியாததால் இந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பகுதியில் செல்லும் ஓடையைத் தூா்வாரி, தரைப் பாலத்தை உயா்மட்டப் பாலமாகத் தரம் உயா்த்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து, இந்தப் பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

35 ஆண்டுகள் பழையது..! டியூக்ஸ் பந்து விவகாரத்தில் இந்திய அணி அதிருப்தி!

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

கடைசி நேரத்தில் மெஸ்ஸியின் அசிஸ்ட்... மீண்டும் ஆட்ட நாயகன் விருது!

திருப்பூர் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை! வடமாநில இளைஞர் கைது!!

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

SCROLL FOR NEXT