விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள வடமலாபுரத்தில், சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, கீழத்திருத்தங்கல் கிராம நிா்வாக அலுவலா் கதிரேசன் தலைமையில் வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.
இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (19), தகரக் கொட்டகை ஒன்றில் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து, திருத்தங்கல் காவல் நிலையத்தில் கதிரேசன் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பால்பாண்டியைக் கைது செய்து, அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.