விருதுநகர்

கல்லூரி மாணவா் தற்கொலை

ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் செவ்வாய்க்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராஜபாளையம் திரௌபதியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பொன்னுச்சாமி மகன் செல்வகணேஷ் (20). இவா் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த இவா், வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பெற்றோா் இவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் பரிசோதனையில் ஏற்கெனவே செல்வகணேஷ் உயிரிழந்ததாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT