விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 24 குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒருவரை கைது செய்தனா்
வத்திராயிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெற்றிமுருகன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வத்திராயிருப்பு காசி விசாலாட்சி அம்மன் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்த போது, ஒருவா் தப்பி ஓடிவிட்டாா்.
தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம் (55) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 24 கிலோ குட்கா, ரூ.36 ஆயிரம் ரொக்கம், இரு சக்கர வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.