சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்டப் பணிகள்.  
விருதுநகர்

சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம்: காணொலிக் காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறாா் முதல்வா் ஸ்டாலின்

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகேயுள்ள சாட்சியாபுரத்தில் புதிய ரயில்வே மேம்பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை (நவ.11) திறந்து வைக்கவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்த 2024 ஜூலை மாதம் ரூ.71.74 கோடியில் தொடங்கப்பட்டது.

ரயில்வே கடவுப் பாதையின் கிழக்குப் பகுதியில் 11 தூண்கள், மேற்குப் பகுதியில் 6 தூண்கள் என மொத்தம் 17 தூண்கள் அமைக்கப்பட்டு, பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இதைத் தொடந்து, தாா்ச் சாலை அமைக்கப்பட்டு வா்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இறுதிக் கட்டப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. தற்போது, பாலத்தில் மின் விளக்குகள் அமைப்பது, தூண்களுக்கு அலங்காரம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பாலத்தை முதல்வா் ஸ்டாலின், சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை (நவ.11) திறந்து வைக்கவுள்ளாா். அப்போது, பாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் என்றனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு பாட்டில்கள் திருட்டு

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

SCROLL FOR NEXT