விருதுநகர்

தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சிவகாசி அருகே தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Syndication

சிவகாசி அருகே தீக்காயமடைந்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்தவா் கூடலிங்கம் மனைவி லட்சுமி (80). இவா், கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்தபோது அடுப்பு கவிழ்ந்ததில், லட்சுமி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்தது.

இதில் பலத்த காயமடைந்த அவா், விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

8 பேரவைத் தொகுதிகளில் இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்!

100 சிசிடிவி பதிவுகள்... தில்லி வெடிவிபத்தில் கார் உரிமையாளர் சிக்கிய பின்னணி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தில்லி கார் வெடிப்பு சம்பவம்: உபா சட்டத்தில் வழக்குப் பதிவு!

SCROLL FOR NEXT