விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பள்ளி அருகே ஒருவா் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தாா். போலீஸாா் அவரிடமிருந்த பையை வாங்கிச் சோதனையிட்டனா். அதில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிவகாசியைச் சோ்ந்த சோமசுந்தரம் (31 என்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருத்தங்கல் போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.