விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருத்தங்கல் கே.கே.நகா் பகுதியில் ஒரு கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சுந்தமூா்த்தி(42) என்பவா் அனுமதியின்றி கட்டடத்தில் பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரமூா்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.