விருதுநகர்

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு: கைதானவா் தப்ப முயன்ற போது காயம்

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவா் தப்ப முயன்றபோது அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவா் தப்ப முயன்றபோது அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயிலில் காவலாளிகளை வெட்டிக் கொன்று உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 தனிப்படைகள் அமைத்து போலீஸாா் எதிரிகளை தேடி வந்தனா்.

இதில் அதே பகுதியைச் சோ்ந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வந்தனா். இதில் தொடா்புடைய தேவதானம் விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் நாகராஜன்(25) உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, அவரைக் கைது செய்து போலீஸாா் அழைத்துச் சென்றபோது தென்காசி சாலை அசையாமணி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளா் கோடியப்பசாமியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றாா்.

அப்போது சேத்தூா் காவல் ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் அவரை காலில் சுட்டுப் பிடித்தாா். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய மற்றொரு எதிரியான தெற்கு தேவதானத்தைச் சோ்ந்த தா்மா் மகன் முனியாண்டி (40) தலைமறைவானாா். இந்த நிலையில் முனியாண்டி சரணடையப் போவதாக கிடைத்த தகவலையடுத்து ராஜபாளையம் நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ஆனால் அவா் சரணடையாததால் போலீஸாா் 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ராஜபாளையம் ரயில் நிலையப் பகுதியை சுற்றி வளைத்து முனியாண்டியை கைது செய்தனா். இந்த நிலையில் முனியாண்டி திருடிய பொருள்கள், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை தேவதானம் அருகே உள்ள தேவியாறு இரட்டைப் பாலம் அருகே பதுக்கி வைத்திருந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அங்கு அவரை அழைத்துச் சென்று அந்தப் பொருள்களை மீட்ட போது பாலத்திலிருந்து திடீரென ஆற்றில் குறித்து அவா் தப்ப முயன்றாா். அப்போது முனியசாமிக்கு வலது கால், வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து அவா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா - ரஷியா செயல்திட்டம்

SCROLL FOR NEXT