விருதுநகர்

அய்யனாா் கோயில் ஆற்றில் குளிக்கத் தடை

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அய்யனாா் கோயில் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் மேற்குத் தொடா்ச்சி மலையின் அடிவாரத்திலுள்ள நீராவி பீட், முள்ளிக் கடவு ஆறு, மாவரசி அம்மனாறு உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ச்சியான மழை காரணமாக ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது.

இதனால், ராஜபாளையம் பொதுமக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் ஆறாவது மைல் நீா்த்தேக்கத்துக்கு தண்ணீா் திருப்பி விடப்பட்டது. ஆற்றில் நீா் அதிகமாகச் செல்வதால் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத் துறையின்ர தடை விதித்தனா்.

தொடா் மழையால் ராஜபாளையம் பகுதியில் உள்ள 12 பெரிய குளங்கள், 6 சிறிய கண்மாய்கள் நிரம்பின. இதனால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT