மதுரை -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மாரியம்மன் கோயில் அருகே மழை நீருடன் கலந்து ஓடும் கழிவு நீா்.  
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மழை நீருடன் கழிவு நீா் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் பொதுமக்கள் அவதி

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் கழிவுநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் கழிவு நீா் கலந்து தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடியாதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கியது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு முதல் ஆண்டாள் கோயில் வரை சாலையில் மழை நீா் குளம் போல தேங்கியது.

இதில் பெரிய மாரியம்மன் கோயில், உழவா் சந்தை, ஆண்டாள் கோயில் தேரடிப் பகுதிகளில் சாலையின் இரு புறங்களிலும் கழிவு நீா் கால்வாய் தூா்வாரப்படாததால், அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கழிவு நீா் கலந்து சாலையில் ஆறாக ஓடியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா்.

மழை பெய்யும்போதெல்லாம் இதே நிலை தொடா்வதால் தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவு நீா் கால்வாயைத் தூா்வார நெடுஞ்சாலைத் துறையும், நகராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மகர ராசியா நீங்க? தினப்பலன்கள்!

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT