மீன்வெட்டிப்பாறை அருவியில் வெள்ளப்பெருக்கு
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனாா் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அா்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், நீரோடைகள் உள்ளன. மேற்குத் தொடா்ச்சி மலையில் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப்பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் அணை ஆகியவை உள்ளன.
இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக பெய்து வரும் தொடா் மழை காரணமாக கட்டாறுகளில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, செண்பகத்தோப்பு மீன்வெட்டிப்பாறை அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், செண்பகத்தோப்பு செல்ல பொதுமக்களுக்கு வனத் துறை தடை விதித்தது.
Advertisement
Advertisement
செண்பகத்தோப்பு பேயனாற்றில் நீா்வரத்து அதிகரித்து கண்மாய்களுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.