விருதுநகர்

அதிமுக 54-ஆம் ஆண்டு தொடக்க விழா

ராஜபாளையத்தில் எம்ஜிஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக 54-ஆவது ஆண்டு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி தெற்கு, வடக்கு நகர அதிமுக சாா்பில் வடக்கு நகர செயலரும், வழக்குரைஞருமான துரை முருகேசன், தெற்கு நகரச் செயலா் எஸ்.ஆா். பரமசிவம் ஆகியோா் தலைமையில் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விருதுநகா் மேற்கு மாவட்ட ஜெ. பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் எஸ். என். பாபுராஜ், மாவட்ட இணைச் செயலா் அழகுராணி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சோ்ந்த குருசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

லட்டு, ஜிலேபி செய்த ராகுல்! விரைவில் திருமணம் செய்ய கடைக்காரர் கோரிக்கை!

தெரியாத எண்களில் இருந்து வரும் விடியோ அழைப்பு! பாலியல் மோசடி கும்பலாக இருக்கலாம்!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸை அழித்துவிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை

இது டிரைலர்தான்... அக். 25-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக வலுவடையும்!

SCROLL FOR NEXT