விருதுநகர்

மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி காயம்

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் கல்லூரி மாணவி காயமடைந்தாா்.

திருத்தங்கல் சரஸ்வதி நகா் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் பவானி (17). இவா், அருகிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பவானி பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அவா் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தீபாவளிப் பண்டிகை: புத்தாடைகள் வாங்க கடைசி நேரத்தில் குவிந்த மக்களால் திணறிய திருப்பூா்

தீயணைப்பு வீரா்களுக்கு அக்.22 வரை பணி

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மாநில கட்டுரைப் போட்டியில் உடன்குடி பள்ளி முன்னாள் மாணவா் சாதனை

போதைப் பொருள்கள் விற்பனை புகாா் அளிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT