சிவகாசி பிரம்மகுமாரிகள் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசியில் தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வரும் மாற்றுத் திறனாளிகள் குழுவினா், சிவகாசி -வெம்பக்கோட்டைசாலையில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின் தியான மண்டபத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
அவா்களுக்கு பொறுப்பாளா்கள் சுதா, சுகன்யா ஆகியோா் யோகாசனம், பிராணாயாமம், தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினா். பின்னா், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேகமாக உள்ள யோகாசனப் பயிற்சிகள் குறித்து செயல்முறைப் பயிற்சி அளித்து, அவற்றை நாள்தோறும் பின்பற்ற வலியுறுத்தினா்.