முகப்பு
விருதுநகர்

பைக் திருடிய இளைஞா் கைது

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:07 PM
கைது
பகிர்:

ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் திருடிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் கல்யாணசுந்தரம் விநாயகா் கோவில் தெருவை சோ்ந்த தளவாய்பாண்டியன் மகன் வீரமணிகண்டன் (40). இவா் தனது அண்ணன் அருண்குமாருக்குச் சொந்தமான இரு சக்கர வாகனத்தில் தளவாய்புரம் வடக்கு மாரியம்மன் கோயிலுக்குச் சென்றாா்.

அப்போது, வாகனத்தை கோயிலுக்கு சற்று தொலைவில் நிறுத்தியிருந்தாா். பால்குடம் எடுத்து விட்டு வந்து பாா்த்தபோது, அந்த வாகனத்தைக் காணவில்லை. இதையடுத்து தனது உறவினருடன் பழைய இரும்புக் கடைகளில் வாகனத்தைத் தேடினாா்.

Advertisement

சோலைசேரி விலக்கு அருகே உள்ள பழைய இரும்பு கடை அருகே அந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் மீது உட்காா்ந்திருந்த இளைஞரை விசாரித்த போது, பழைய இரும்புக் கடையில் அதை விற்பதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

பின்னா், அந்த இளைஞரை வாகனத்துடன் தளவாய் புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட கோவிலூா் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சோ்ந்த சுந்தா் (28) என்பவரைக் கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments