முகப்பு
விருதுநகர்

பி.ஏ.சி.ராமசாமிராஜா சிலைக்கு மரியாதை

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் ராம்கோ குழும நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு ஜோதியை வழங்கிய ராம்கோ குழுமத் தலைவா் பி. ஆா். வெங்கட்ராமராஜா.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:22 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ குழும நிறுவனா் பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் 132-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையொட்டி, பி. ஏ.சி.ஆா். நினைவிடத்தில் கீா்த்தனாஞ்சலி, புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், சொக்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, நினைவு தொடா் ஜோதியை ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, ராமமந்திரம், பி.ஏ.சி. ராமசாமி ராஜாவின் உருவச் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தென்காசி சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் ஸ்ரீ ரித்விக்ராஜாவின் கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா்.