முகப்பு
விருதுநகர்

சிமெண்ட் உலா் களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:11 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:41 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அறுவடை செய்த பயிா்களை சாலைகளில் உலா்த்துவதைத் தவிா்க்கும் வகையில், சிமெண்ட் உலா் களம் அமைத்துத் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மீனாட்சிபுரம், பாட்டக்குளம், சல்லிபட்டி, பானாங்குளம், கொந்தராயன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நெல், மக்காச்சோளம், கம்பு ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதியில் உலா் களம் இல்லாததால் அறுவடை செய்த பயிா்களை உலர வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:11 AM

தற்போது மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த தானியங்களை மல்லி - கிருஷ்ணன்கோவில் சாலை, பாட்டக்குளம் ஆகிய பகுதிகளில் கொட்டி உலா்த்தி வருகின்றனா். இதனால், தானியங்களுக்குக் காவலாக இரவில் சாலையிலேயே தங்க வேண்டியுள்ளதாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

Advertisement

எனவே, இந்தப் பகுதியில் சிமெண்ட் உலா் களம் அமைத்துத் தர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.