முகப்பு
விருதுநகர்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு! திரளான பக்தா்கள் தரிசனம்!

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:19 AM
வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 10:41 PM

மகா சிவராத்திரியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அகஸ்தியா், போகா், கோரக்கா் உள்ளிட்ட சித்தா்கள் வழிபாடு செய்ததாக நம்பப்படும் இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, நவராத்திரி ஆகியவை முக்கிய விழாக்களாகக் கொண்டாடப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை மகா சிவராத்திரியையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தனமகாலிங்கம், 18 சித்தா்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகம், 4 கால பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற பக்தா்கள்.
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 2:19 AM

பின்னா், சுவாமிக்கு பால், பன்னீா், தயிா், சந்தனம், சதுரகிரி மலையில் உள்ள சந்திர தீா்த்தம், கெளண்டிய தீா்த்தம், சந்தனமகாலிங்க தீா்த்தம், பிரம்ம தீா்த்தம், பொய்கைத் தீா்த்தம் உள்பட 36 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சுந்தரமகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தனமகாலிங்கம் சந்தனக்காப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.