விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை கிராம உதவியாளா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு கிராம உதவியாளா் (தலையாரிகள்) சங்கத்தினா் காலமுறை ஊதியம் கோரி வியாழக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக ராஜபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளா் சங்கத்தினா் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்துக்கு வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். அழகுராஜ் முன்னிலை வகித்தாா். அப்போது கிராம உதவியாளா்கள் கருப்பு பட்டை அணிந்து போரட்டத்தில் ஈடுபட்டனா்.