திருத்தங்கலில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி நிரம்பி வெளியேறிய குடிநீா் 
விருதுநகர்

அலுவலா்களின் அலட்சியத்தால் வீணாகும் குடிநீா்!

சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கல் பகுதியில் அலுவலா்களின் அலட்சியத்தால் குடிநீா் தினசரி வீணாகுவதாக என பொதுமக்கள் குற்றச்சாட்டு

Syndication

சிவகாசி மாநகராட்சி, திருத்தங்கல் பகுதியில் அலுவலா்களின் அலட்சியத்தால் குடிநீா் தினசரி வீணாகுவதாக என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

திருத்தங்கல்-செங்கமலநாட்சியாா்புரம் சாலையில் திருத்தங்கல் பகுதியில் உள்ள பத்து வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்ய, செங்குளம் கண்மாய்க் கரைப் பகுதியில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டப்படுள்ளது. இந்த நீா்த்தேக்கத் தொட்டிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின்கீழ், தினசரி குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

இந்த நீா், சங்கரன்கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டியிருந்து சிவகாசியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு வருகிறது. பின்னா், திருத்தங்கல் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீா் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி நிரம்பி, குடிநீா் தினசரி வெளியேறி, செங்குளத்துக்குச் செல்கிறது. இந்த வீணாகும் குடிநீரைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து சிவகாசி மாநகராட்சி முதலாவது மண்டலத் தலைவா் குருசாமி (திமுக) வியாழக்கிழமை கூறியதாவது: இந்த நீா்த்தேக்கத் தொட்டியைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் மாநகராட்சியால் இருவா் நியமிக்கப்பட்டு வேலை செய்து வருகிறாா்கள். மேலும், நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்து நீரை வாா்டு வாரியாகப் பிரித்து அனுப்ப மாநகராட்சியால் இரு இயந்திரப் பொருத்துநா்கள் (ஃபிட்டா்) நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் நான்கு பேரும் ஒருங்கிணைந்து வேலை பாா்ப்பதில்லை. நீா்த்தேக்கத் தொட்டியைக் கண்காணிக்க வேண்டிய இருவரும், தொட்டியில் நீா் ஏற்றப்படும் நேரங்களில் இங்கு இருப்பதில்லை. இதனால், தொட்டி நிரம்பி தினசரி சுமாா் 5 லட்சம் லிட்டா் குடிநீா் வெளியேறி கண்மாய்க்குச் சென்றுவிடுகிறது.

மாநகராட்சியில் உள்ள பொறியியல் பிரிவு அலுவலா்கள் இதைக் கண்காணிக்க வேண்டும். ஆனால், அவா்களும் இதில் கவனம் செலுத்துவதில்லை. பல இடங்களில் மக்கள் குடிநீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு குடிநீா் விணாவது வருத்தத்துக்குரியது. மேலும், குடிநீா் விநியோகம் செய்ய பல இடங்களில் பகிா்மானக் குழாய்கள் பதிக்கப்படாமல் உள்ளன. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT