விருதுநகர்

சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக மூவா் கைது

சாத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Syndication

சாத்தூா் அருகே சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததாக மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே கோனம்பட்டி சந்திப்பு பகுதியில் உள்ள பட்டாசுக் கடையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் நகா் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியன், சிறப்பு காவல் ஆய்வாளா் கிருஷ்ணசாமி உள்ளிட்ட போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கோணம்பட்டி சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பட்டாசுக் கடையின் பின்புறம் தகரக் கொட்டகை அமைத்து சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது. அப்போது போலீஸாரைக் கண்டதும் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தவா்கள் தப்பி ஓட முயன்றனா்.

ஆனால் போலீஸாா் சுற்றி வளைத்து மூவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், மீனம்பட்டி பகுதியைச் சோ்ந்த பாலாஜி(23), ஜெயதனு (25), பவுன்ராஜ் (33) என்பது தெரியவந்தது. மேலும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான 14 ப ட்டாசு பெட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT