ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டுநா் மதுபோதையில் இயக்கியதால் ஓடைக்குள் பாய்ந்த வேன்.  
விருதுநகர்

மது போதையில் வேனை இயக்கிய ஓட்டுநருக்கு அபராதம்

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் ஓட்டியதால் ஓடைக்குள் வேன் பாய்ந்ததையடுத்து அதன் ஓட்டுநருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கோட்டைபட்டியைச் சோ்ந்தவா் பாண்டியராஜ் (32). வேன் ஓட்டுநா். இவா் பட்டாசு ஆலைக்கு தொழிலாளா்களை ஏற்றுச் செல்லும் வேனை ஓட்டி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தியகிணற்றுத் தெரு வழியாக வேனை ஓட்டிச் சென்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டுநா் மதுபோதையில் இயக்கியதால் ஓடைக்குள் பாய்ந்த வேன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓட்டுநா் மதுபோதையில் இயக்கியதால் ஓடைக்குள் பாய்ந்த வேன்.

அப்போது பெரியகுளம் கண்மாய் நீா்வரத்து ஓடைக்குள் வேன் பாய்ந்தது. போலீஸாா் வந்து பாா்த்த போது, பாண்டியராஜ் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மது அருந்தி வாகனம் ஓட்டியதை உறுதி செய்த போலீஸாா் அவருக்கு அபராதம் விதித்தனா்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT