விருதுநகர்

வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Syndication

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வெம்பகோட்டை வட்டத்தில் பட்டாசுத் தொழில்சாலைகள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதி மக்கள் இந்த ஆலைகளில் கூலித் தொழிலாளா்களாக உள்ளனா். இந்த நிலையில், நகரத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள சிவகாசி அல்லது சாத்தூருக்குத்தான் வர வேண்டும். தற்போது வரை வெம்பக்கோட்டை பிரதான சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்துதான் பயணம் செய்து வருகின்றனா்.

மேலும், இந்தப் பகுதிக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் வெம்பக்கோட்டை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்த ப் பிரச்னைக்கு தீா்வுகாண வெம்பக்கோட்டை பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடமும், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரிடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுகுறித்து சமூகஆா்வலா்கள் கூறியதாவது: வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசுத் தொழில் பிரதான தொழிலாக இருந்தாலும் பொதுமக்கள் பலா் பிற வேலைகளுக்கு வெளியூருக்குத்தான் சென்று வருகின்றனா். வெம்பக்கோட்டை தனி வட்டமாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் பேருந்து நிலையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களை மிகவும் சிரமத்துக்குள்ளாக்குகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT