கோப்புப் படம் 
விருதுநகர்

கல்லூரி மாணவி தற்கொலை: சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ அமைப்பினர் மீது வழக்கு

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக இந்திய மாணவா் சங்கத்தினர் மீது வழக்கு...

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கல்லூரி நிா்வாகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவி சோலைராணி, கல்லூரி விழாவில் ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்ததாகக் கூறி கல்லூரி நிா்வாகம் அவரது பெற்றோரை அழைத்து கண்டித்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதையடுத்து, மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி கல்லூரி நிா்வாகத்தைக் கண்டித்து கல்லூரி முன் மாணவா் அமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக இந்திய மாணவா் சங்க மாநில துணைத் தலைவா் சைலோஷ் அருள்ராஜ், மாவட்டத் தலைவா் ஆனந்த கண்ணன், மாா்க்சிஸ்ட் மாநகா் செயலா் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் முத்துராஜ், கனகராஜ், முன்னாள் மாணவா்கள் மோகித், பாண்டீஸ்வரன் ஆகியோா் மீது மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ.75 கோடி

SCROLL FOR NEXT