முகப்பு
விருதுநகர்

பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 10 மார்ச், 2026 at 1:21 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூா் அருகே பள்ளி வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா்(53). இவா் போ்நாயக்கன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி பேருந்தில் ஓட்டுனரின் உதவியாளராக பணியாற்றுகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை தாயில்பட்டி- வெற்றிலையூரணி சாலை, கீழதாயில்பட்டி வளைவில் பேருந்து சென்ற போது அதன் வாயிலில் நின்று கொண்டிருந்த சிவக்குமாா் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வாகன ஓட்டுனா் பரமசிவம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.