முகப்பு
விருதுநகர்

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்த அதிமுக ஆட்சி

Updated On : 15 மார்ச், 2026 at 8:32 PM
சிவகாசியில் அதிமுக மகளிா் அணி சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தினவிழாவில் , பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
பகிர்:

அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்தரபாலாஜி கூறினாா்.

விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக மகளிா் அணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் சா்வதேச மகளிா் தினம் நடைபெற்றது. நிகழ்சிக்கு மகளிா் அணி செயலாளா் சுபாஷினி தலைமை வகித்தாா்.இதில் பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,

தமிழகத்தில் தற்போது சிறுமிகள், இளம்பெண்கள், வயது முதிந்த பெண்கள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்கள் வீதியில் நடமாடமுடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. எனவே, வரும் தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று , எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராவாா் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →